பசுந்தளிர் முன் பள்ளிக்கான ஒரு பகுதி சுற்று மதில் அத்திவாரம் ரூ.145,950 செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவர் சந்தா பணம் வங்கி நிலையான வைப்பில் 30,00,000 இடப்பட்டுள்ளது.
கண்டுமணி மகா வித்தியாலய கபடி அணியினரின் போக்குவரத்துச் செலவின் ஒரு பகுதி 60,000 அளிக்கபட்டது
கல்வி குழு அமைக்கப்பட்டு, செயட்பாட்டில் உள்ளது.கடந்த வருட தரம் 5 மா ணவர்களது மேலதிக வகுப்பு ஆசிரியர் கொடுப்பணவு 100,000 வழங்கப் பட்டுள்ளது.
விபுலானந்த வித்யாலய பரிசளிப்பு விழாவுக்கு நன்கொடை 70,000 வழங்கப்பட்டது.
பாலர் பாடசாலைகளுக்கு 135,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. விபுலானந்த வித்யாலய மேலதிக வகுப்புகளுக்கான முன்மொழிவு ஏற்று கொள்ளப்பட்டு, மாதாந்தம் 80,000 வழங்கப்படுகி றது. பா ட்டிருப்பு கல்வி வலய அலுவலகத்தி க்கு SMART TV அண்பளிப்பு செய்யபடுள்ளது.
கண்டுமணி மகா வீதியாலய மேலதிக வகுப்புகளுக்காக 2023 சித்திரை மாதம் வரை மாதாந்தம் 80,000 கொடுப்பனவு செய்யப்படுகிறது.
2023 வை காசி மாதம் கண்டுமணி மகா வித்தியாலய க.பொ.த சாதாரண தர பரீட்சை க்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கு வி சே ட கருத்தருங்கு செயலமர்வுகள் நடாத்தப்பட்டது. பழுகாம குளக்கட்டில் ஒரு பகுதி அளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பழுகாமப் பாடசாலைகளுக்கு கற்றலுக்கான உதவியினை வேறு அமைப்பினூடாகவும் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின.
அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுக்க பழுகாமத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. பழுகாமம் பகுதியில் இடம் பெறும் மரண வீடுகளுக்கு, கண்ணீர் அஞ்சலி பதாதை இடப்பட ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது
கண்டுமணி மகா வித்யாலய மேலதிக வகுப்புகளுக்காக மாதாந்தம் 100,000 கொடுப்பனவு செய்யப்படுகிறது.
பழுகாமம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கண்டுமணி மகா வித்தியாலய கபடி அணியினருக்கு 25 பாதணிகள் ரூ100,000 செலவில் வழங்கப்பட்டன. பழுகாமம் மாவேற்குடா சரஸ்வதி பாலர் பாடசாலைக்கு கற்றுவேலி அமைப்பதற்கும் கட்டடத்திற்கு நெற் அடிப்பதற்குமாக ரூ.110,000 நிதி பெறப்பட்டு ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.